• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் ஏ

Byadmin

Nov 28, 2026


ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’. இலங்கை ‘ஏ’. ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா ‘ஏ’, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் ‘ஏ’, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம்பிடித்தன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் வங்கதேசம் ஏ, பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.

By admin