• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து ரோயல் இராணுவ தலைமையகத்துக்கு குண்டுத் தாக்குதல் மிரட்டல் – பொலிஸ் தீவிர சோதனை

Byadmin

Nov 28, 2026


இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் (Portsmouth) நகரில் அமைந்துள்ள ரோயல் நேவியின் தலைமையகமான HMS Excellent மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிரட்டல், நேற்று (26) தொலைபேசி அழைப்பின் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இணைந்து HMS Excellent தளத்தில் விரிவான பாதுகாப்புச் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, சந்தேகத்துக்கிடமான எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அவசர சேவைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பகுதியில் தற்காலிகமாகப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டதுடன், பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

தற்போது எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்துள்ள ரோயல் இராணுவ அதிகாரிகள், தலைமையகத்தின் வழக்கமான செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

By admin