பதிலடி தாக்குதல்:
“உலகளாவிய தாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்ட இந்த வகையான சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் திறன் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ரஷியாவும் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ரஷியாவின் அணு ஆயுத தடுப்பு அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். ஏனெனில், நீருக்கடியில் இரகசியமாக செயல்படும் அவற்றின் திறன், ஒரு தாக்குதல் நிகழும் பட்சத்தில் பதிலடி தாக்குதல் நடத்தும் ஆற்றலை உறுதி செய்கிறது.
எந்த பகுதியிலும் இயங்க முடியும்:
2030-ஆம் ஆண்டுக்குள் கடற்படை மேலும் ஐந்து கப்பல்களைப் பெறும் என்றும், அவற்றில் மூன்று கப்பல்கள் பெர்ம் கப்பலின் அதே வகையை சேர்ந்தவை என்றும் புதின் கூறினார்.
பல்வேறு வகையான கிரூஸ் ஏவுகணைகளை சுமந்துகொண்டு, இந்த நீர்மூழ்கி கப்பல்களால் “உலகின் எந்த பெருங்கடல் பகுதியிலும்” இயங்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.