ஓராண்டில் ஒரே ஒரு பிரம்மாண்டமான விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றி பெறும் படங்களை வழங்கி நட்சத்திர அந்தஸ்தில் தொடர்ந்து நீடித்து வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் திருவிழாவில் வெளியாகிறது என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், திலீப் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவும் செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டைலர் டர்ன் & கினோ ஃபிஸ்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். டி . எழில் மதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில், இதன் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக புகைப்படம் கோட்டோவிய பாணியில் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்த்திருக்கிறது.
The post பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ appeared first on Vanakkam London.