பேசாமல் புறப்பட்டு சென்றனர்:
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “நாங்கள் எங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளோம். அவர் (பவார்) இதை புரிந்துகொண்டிருப்பார் என்றும், எங்களுக்கு ஆதரவளிப்பார் என்றும் நம்புகிறேன். தேசத்தின் நலனே எப்போதும் முதன்மையானது.
அவர் எப்போதும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்றவர். ‘இந்தியா’ கூட்டணிக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று தெரிவித்தார்
நீரிழப்பு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயதான சரத் பவாரை சந்தித்த பிறகு, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், வெளியே காத்திருந்த ஊடகத்தினரிடம் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.