• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி – நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

Byadmin

Apr 18, 2026


 நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, கனிமொழி பேசியது என்ன?

பட மூலாதாரம், SANSAD TV

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் வாக்கெடுப்பிற்குப் பிறகு தோல்வியடைந்தது.

மசோதாவுக்கு ஆதரவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற பாஜக கூட்டணி தவறிவிட்டது

மீதமுள்ள இரண்டு திருத்த மசோதாக்களையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

முன்னதாக மசோதா குறித்த விவாதத்திற்குப் பிறகு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

”இந்த மசோதாவின் நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும். சில நாடாளுமன்றத் தொகுதிகளில் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியிருக்கும்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மீது எப்படி கவனம் செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.

By admin