• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

TVK Vijay | பெரம்பூரில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து

Byadmin

Apr 18, 2026


தமிழ்நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நாளை பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருந்தார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் அனுமதி பெறப்பட்டு இருந்தது. பரப்புரைக்கு காவல் துறை அனுமதியும் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பெரம்பூரில் நாளை விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் தகவல் தெரவிக்கப்பட்டது.

By admin