• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க | கனகா அம்மாவிடம் சொன்ன ரஜினிகாந்த்

Byadmin

Sep 8, 2026


நடிகை கனகா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. தொடர்ந்து நீண்ட காலமாக தனிமையில் இருந்த அவர்; சில வருடங்களுக்கு முன்பு குட்டி பத்மினி மூலம் வெளிப்பட்டார்.

அடிக்கடி அவரை பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் கனகாவின் அம்மாவிடம் ரஜினிகாந்த் பேசிய விஷயம் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் தேவிகா. பல ஹிட் படங்களில் நடித்தவரின் மகள்தான் கனகா. கங்கை அமரனின் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கனகா ஹீரோயினாக அறிமுகமானபோது இப்படம் பெரிதாக ஹிட்டாகாது என்றுதான் தேவிகா நினைத்தார்.

ஆனால் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தன. பிஸியான நடிகை கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார்.

ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. அவரது தாயின் மரணம் அவரை ரொம்பவே பாதித்துவிட்டது. தனிமையான கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.

தந்தையுடனும் பிரச்னை ஏற்பட்டிருந்தது. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு அவர் வெளிப்பட்டார். பேட்டியெல்லாம் இல்லை: நடிகை குட்டி பத்மினியை சந்தித்த அவர்; சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு சென்றார். கனகா விரைவில் தனக்கு பேட்டி கொடுப்பார் என்று உறுதியும் கொடுத்திருந்தார் பத்மினி. ஆனால் பேட்டியெல்லாம் அவர் கொடுக்கவில்லை. அவர் பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் அந்த சமயத்தில் அவர் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதிலும் அவரது கெட்டப் எல்லாம் மொத்தமாகவே மாறியிருந்தன.

இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ரஜினி சொன்னது: அந்தப் பேட்டியில் அவர், “கனகா படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போது அவரது அம்மா தேவிகா நாற்காலியில் அமர்ந்துகொண்டு வசனங்களில் எல்லாம் தலையிடுவார். இதெல்லாம் சரியாக வரும், சரியாக வராது என்று சொல்வார். மேலும் கனகா மீது முழு கவனத்தையும் வைத்து அனைத்திலும் தலையிடுவார். அப்படித்தான் ரஜினிக்கு ஜோடியாக கனகா நடித்த அதிசய பிறவி திரைப்படத்திலும் நடந்துகொண்டார்.

இதை கவனித்த ரஜினி, தேவிகாவின் அருகே அமர்ந்து, ‘அம்மா நீங்களும் ஒருகாலத்தில் பெரிய நடிகையாக இருந்தவர். உங்களுக்கே தெரியும். நீங்கள் இப்படி அமர்ந்துகொண்டு அனைத்திலும் தலையிட்டுக்கொண்டிருந்தால் உங்கள் மகள் எப்படி பெரிய ஹீரோயினாக மாறுவார். நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள். பிறகு எப்படி உங்களை மீறி தவறாக எடுத்துவிட முடியும்’ என கேட்டார். அந்த அளவுக்கு கனகா மீது தேவிகாவுக்கு பொசசிவ்னெஸ்” என்றார்.

நன்றி : tamil.filmibeat

By admin