• Thu. Apr 16th, 2026

24×7 Live News

Apdin News

‘மக்களவையில் 850 எம்.பி.க்கள்’ – புதிய மசோதாவுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏன்? எளிய விளக்கம்

Byadmin

Apr 16, 2026


'மக்களவையில் 850 எம்.பிக்கள்' - புதிய மசோதாவுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images/x

‘மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்படும், மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்’ – இந்த இரண்டு முக்கிய மாற்றங்களை செவ்வாயன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்ட மூன்று வரைவு மசோதாக்களில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த மசோதாக்கள் ஏப்ரல் 16 முதல் 18 வரை கூடவிருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்படும்.

யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026, அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவையே அந்த மூன்று மசோதாக்களாகும்.

இவை 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.

இந்த காரணத்தினால்தான், 2023-ஆம் ஆண்டு சட்டம் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகலாம் என்று பலர் கவலை தெரிவித்தனர்.

By admin