• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

மணிப்பூரில் பெண் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை – 30 வீடுகள், கடைகள் எரிப்பு

Byadmin

Oct 11, 2026


மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 1 பெண் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டம் ஷெசத் கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு நடந்த மோதலில் 22 வயது இளைஞர், 42 வயது பெண் என 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதேபோல், உஹ்ரல் மாவட்டம் ஷபு யாலோன் கிராமத்தில் சந்தீப் ராய் (வயது 40) என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும், 30 வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பெண் கொலை

குறிப்பாக காம்ஜோங் மாவட்டத்தில் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்முறை வெடித்தது.

நாகா இனத்தவர் ஆதிக்கம் செலுத்தும் கம்ஜோங் மாவட்டத்தில், குகி இனத்தவர் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியான சசாத் கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு சுமார் 9.35 மணியளவில் ஐந்து பிள்ளைகளின் தாயான அந்தப் பெண் கழுத்தில் சுடப்பட்டு, சில நிமிடங்களிலேயே உயிரிழந்ததார்

இதைதொடர்ந்து வன்முறை ஏற்பட்டதால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் 2023ம் ஆண்டு நாகா, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தது. பின்னர், ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் யும்னம் கேம்சந்த் சிங் முதலமைச்சராக உள்ளார்.

இந்த சூழலில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

By admin