• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

‘தமிழ்நாட்டின் மொழி, கலாசாரம் இந்தியாவின் அடித்தளம்’ – மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?

Byadmin

Oct 10, 2026


மொழி, கல்வி, வினாதாள் கசிவு குறித்து சென்னையில் ராகுல்காந்தி பேசியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒரு மாநிலத்தின் மீது மற்றொரு மொழியையோ சித்தாந்தத்தையோ திணிப்பது, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். சென்னையில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, அவர்கள் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, மாணவி ஒருவர், “எங்களுடன் தங்கி, எங்களுடைய வாழ்க்கை முறையை ஒருநாள் நேரில் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “எப்போது என்று சொல்லுங்கள், வருகிறேன்” என்றார்.

மாணவர்களுடனான இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் முன்வைத்த கருத்துகள் என்ன? அவற்றுக்கு ராகுல் காந்தி அளித்த பதில்கள் என்ன?

சென்னை தீவுத்திடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ”மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

”கல்வித் துறையில் நிலவும் சவால்கள், வேலைவாய்ப்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரல்” ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், அவர்கள் முன்வைத்த கருத்துகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார்.

By admin