ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சரிவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் தொடக்கம்
தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போதிய வெளிச்சமின்மை காரணத்தால் ஆஸ்திரேலியா 65.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. ரென்ஷா 46 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரென்ஷா அபாரம்
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் நிலைத்து நின்ற விளயைாடினர். பேட் கம்மின்ஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரென்ஷா அபாரமாக விளையாடினார். அவர் அரைசதத்தை சதமாக மாற்றினார். பின்னர் சதத்தை 150 ஆக மாற்றினார்.
150-ஐ இரட்டை சதமாக மாற்ற முயற்சி செய்தார். இறுதியாக 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதோடு ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 390 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டும், அன்ரிச் நோர்ஜே 2-வது விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ரிக்கெல்டன் டக்அவுட்
பின்னர், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரியான் ரிக்கெல்டன் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் டேவிட் பெடிங்காம் களம் ஜோடி சேர்ந்தார். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருக்கும் போது 2-வது நாள் ஆட்டம முடிவுக்கு வந்தது.