எங்கள்மண் வீரம்கொண்டு
எழுந்திட செய்தவனே…
பங்கம் இல்லாமல்
ஒற்றை குடையினுள் காத்தவனே
மேதகு தலைவனே
மேதினியில் மேலானவனே
விதிமாற்றி எழுதிவிட்ட
வீரத்தின் பெரும்பிறப்பே
வானம் முகிலுக்கு
வளைகாப்பு நடத்தும்வேளை
வல்வையில் வந்துதித்த
வடிவான பிள்ளை இவன்
இமாலய வியப்பாளனுக்கு
இனத்தின் குறியீட்டாளனுக்கு
ஒற்றைச் சொல் மந்திரத்துக்கு
ஒருபெரும் சரித்திரத்துக்கு
அன்பின் ஆழுமைக்கு
ஆயுத எழுத்துக்கு
எங்களின் முகவரிக்கு
ஏற்றம் கொண்ட வல்லமைக்கு
புழுதி மண்ணின் பொக்கிசத்துக்கு
பொற்காலம் படைத்த
போர்க்கால தம்பிக்கு
மண்ணில் சுடும் சூரியனாகி
இயக்கையை நண்பனாக்கி
வாழ்க்கையை த த்துவ ஆசிரியனாக்கி
வரலாற்றை வழிகாட்டியாக்கியவன்
வந்துதித்தவன் நாள் இன்று
இவன்…..வீரம்தான்
கிழக்கை வெழுக்கச் செய்தது
மேற்கை சிவக்கச் செய்தது
தெற்கை அடங்க வைத்து
மேலெழுந்து மேதகு
ஆனவனுக்கு
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்
ரேணுகா உதயகுமார்
The post மண்ணில் முளைத்திட்ட மங்காத சூரியன் | ரேணுகா உதயகுமார் appeared first on Vanakkam London.