• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: நிலவரம் என்ன? நேரலை

Byadmin

Oct 9, 2026


மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை - தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.

தாராபுரம் நிலவரம்

தாராபுரம் தொகுதியில் மூன்று சுற்றுகளின் முடிவில், தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி 8,244 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா 7,434 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக மற்றும் தவெக வேட்பாளர் இடையே 810 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

By admin