• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யாருக்கு மிக முக்கியம்?

Byadmin

Sep 13, 2026


மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க, அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் த.வெ.க உள்ளதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், ‘அவ்வாறு பெறாவிட்டால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான பிம்பத்தில் சரிவு ஏற்படும்’ என்கின்றனர்.

அதற்கேற்ப, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு, முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தற்போது த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக வழக்கறிஞர் பரந்தாமனும் அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத்தும் களமிறங்குகின்றனர். அதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தற்போது த.வெ.க வேட்பாளராக விசில் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

By admin