• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

மதுரை: லாரி ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் – செக்கானூரணி காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

Byadmin

Nov 15, 2026


மதுரை: விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற நபர் மரணம் - கடைசி செல்போன் அழைப்பில் என்ன பேசியதாக மனைவி கூறினார்?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அவரது புகாரின் பேரில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் குறைவாக இருப்பதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் (GPS) கருவிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையிடம் கூரியர் நிறுவனம் புகார் அளித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காகச் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வந்திருந்த பாலகிருஷ்ணன், கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.

பாலகிருஷ்ணன் கடைசியாக தன்னுடன் செல்போனில் பேசுகையில் என்ன கூறியதாக அவரது மனைவி கூறினார்? காவல்துறை என்ன சொல்கிறது?

By admin