• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் – ‘ஜென் Z’களை கவர பிரதமர் மோடி பிளான்

Byadmin

Aug 20, 2026


தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.

By admin