• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

Byadmin

Aug 20, 2026


சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இத்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அனைத்துலக மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அனைத்துலக மாநாடு ஆகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  தந்தை செல்வா கலையரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தாமதமான நீதி, நீண்ட காத்திருப்பில் உள்ள குடும்பங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், உண்மை, சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல், ஈடு செய்தல், மீண்டும் நடக்காதிருக்கும் உறுதியை நாடும் “நீதிக்கான நீள்பயணம்” என்ற தொனிப்பொருளில் இந்த அனைத்துலக மாநாடு நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் உண்மைக்காக, நீதிக்காக இணைந்து பங்கேற்குமாறு அனைவருக்கும் மாநாடு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin