• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

மனசா: காரில் 4 நாட்கள் மறைத்து வைக்கப்பட்ட பெண் உடல் – ‘அசைவ உணவு வைத்திருந்தேன்’ என்ற நபர் சிக்கியது எப்படி? கொலைக்கு பெண்ணின் தந்தையும் தூண்டுதலா?

Byadmin

Aug 25, 2026


குற்றம் சாட்டப்பட்ட வினோத்தும் உயிரிழந்த மனசாவும் சிறுவயது முதலே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும், இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் ஏசிபி பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மனசா

(இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன)

காரின் டிக்கியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

‘இந்தக் கொலைக்கு மறைமுகமாகத் தூண்டுதலாக இருந்தத உயிரிழந்த பெண்ணின் தந்தை’ தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

“உயிரிழந்த பெண்ணின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, அவரை கொலை செய்து உடலை அப்புறப்படுத்த குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முடிவு செய்தனர்,” என்று காசிபேட் ஏசிபி பிங்கலி பிரசாந்த் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட தனது காதலியின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, காதலன் கைது செய்யப்பட்டதாக ஏசிபி தெரிவித்துள்ளார்.

By admin