• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

மனிதர்களின் மூக்கு வடிவம் நியாண்டர்தால்களிடமிருந்து வந்ததா? புதிய ஆய்வு சொல்வது என்ன?

Byadmin

Jul 12, 2026


முதல் முகம் ஜான் குர்ச் என்பவரால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு நியண்டர்தாலின் முகம் ஆகும், இது ஸ்மித்சோனியன் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது முகங்கள் நவீன மனிதர்களுடையது, ஒன்று ஐரோப்பியர் மற்றும் மற்றொன்று கிழக்கு ஆசியர்.

பட மூலாதாரம், Macarena Fuentes-Guajardo

    • எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்ட போதிலும், நியாண்டர்தால் மனிதர்கள் இன்னும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துவதிலும், செய்திகளில் இடம்பிடிப்பதிலும் தங்களது புகழை தக்க வைத்துள்ளனர்

ஒரு காலத்தில் நாமும் நியாண்டர்தால்களும் இந்த பூமியைப் பகிர்ந்து வாழ்ந்தோம். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் நெருங்கிய உறவினர்களான அவர்கள் சுமார் 4 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களின் மரபணு பாரம்பரியம் இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.

உண்மையில், நியாண்டர்தால்களிடமிருந்து நாம் பெற்ற சில மரபணு பண்புகள் மனிதர்களுக்கு பரிணாம வளர்ச்சியில் முன்னிலை அளித்ததுடன், உயிர்வாழ உதவியதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

முழுமையான நியண்டர்தால் மரபணுவின் முதல் உயர்தரப் பிரதி எடுக்கப்பட்டதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய மக்களிடம் அதன் தடயங்களைத் தேடி வருகின்றனர்.

அத்தகைய ஆராய்ச்சியாளர்களில் ஒரு குழு, லத்தீன் அமெரிக்க மக்களை மாதிரியாகக் கொண்டு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை 2023ஆம் ஆண்டு வெளியிட்டது.

By admin