• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

மனோரமாவின் மறக்க முடியாத 10 படங்கள் எவை?

Byadmin

May 26, 2026


மனோரமா, கோலிவுட்

பட மூலாதாரம், S KUMARESAN

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர் யார் என்று கேட்டால், ‘ஆச்சி’ மனோரமா என்பார்கள். சுமார் 1500 படங்களில் நடித்து சாதனை படைத்து இருக்கிறார். இது தவிர ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.

முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகங்களில் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் சினிமாவில் நடித்து இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நடித்தார். அந்த வகையில் 6 முதல்வர்களுடன் நடித்த நடிகை என்ற சாதனையை படைத்திருந்த மனோரமா 2015ல் மறைந்துவிட்டார்.

ஆனாலும், இந்த மாதம் அந்த சாதனையை அவரே முறியடித்துவிட்டார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், 7 முதல்வர்களுடன் நடித்த நடிகை என்ற சாதனையை மனோரமா படைத்து இருக்கிறார்.

ரசிகன் உள்ளிட்ட படங்களில் முதல்வர் விஜயுடன் மனோரமா நடித்து இருக்கிறார். இன்று மனோரமா பிறந்தநாள்.

6 மொழிகளில் நடித்தவர்

மனோரமாவுக்கு ஒரே மகன் பூபதி. அவரும் நடிகர்தான். அவரின் மகனும், மனோரமாவின் பேரனுமான ராஜராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்

By admin