• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

மாலத்தீவில் 164 அடி ஆழமுள்ள கடல் குகையை ஆராய சென்ற 5 பேருக்கு என்ன நேர்ந்தது?

Byadmin

May 16, 2026


மாலத்தீவு, ஸ்கூபா டைவிங், இத்தாலி

பட மூலாதாரம், Instagram/University of Genoa/Albatros Top Boat

படக்குறிப்பு, உயிரிழந்த ஐவரில் ஜியோர்ஜியா சோம்மாகல் (இடது), அவரது தாய் மோனிகா மான்டெஃபால்கோன் (மத்தியில் இருப்பவர்) மற்றும் நீச்சல் பயிற்சியாளர் ஜியான்லூகா பெனடெட்டி ஆகிய மூவரும் அடங்குவர்

    • எழுதியவர், யரோஸ்லாவ் லுகிவ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மாலத்தீவில் நிகழ்ந்த ஸ்கூபா டைவிங் விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்துள்ளதாக ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“சுமார் 50 மீட்டர் (164 அடி) ஆழத்தில் உள்ள குகைகளை ஆராய முயன்றபோது இந்த டைவர்கள் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ள அமைச்சகம், இந்தச் சம்பவம் மாலத்தீவின் வாவ் அட்டோல் பகுதியில் நடந்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சூழலியல் பேராசிரியை மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

கடலுக்கடியில் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குகையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற நான்கு டைவர்களும் அங்கேயே இருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் மாலத்தீவு ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிக்குச் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய டைவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ராணுவம், இந்தத் தேடுதல் நடவடிக்கையை மிகவும் அதிக ஆபத்து நிறைந்தது என விவரித்துள்ளது.

By admin