“இதில் முதற்கட்டமாக 200 விமானங்களும், இதைத் தொடர்ந்து மேலும் அதிக எண்ணிக்கையிலான விானங்களை வழங்குவதற்கான உறுதிப்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம். சீனாவின் விமானத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதை நாங்கள் இப்போது எதிர்நோக்குகிறோம். இந்த மைல்கல்லை சாத்தியமாக்கிய அதிபர் டிரம்ப்-க்கு நன்றி,” என்று போயிங் நிறுவனம் தெரிவத்து இருக்கிறது.
போயிங் நிறுவனத்திடம் இருந்து சீனா கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்டர் செய்தது. அப்போது டிரம்ப், தனது முதல் வெள்ளை மாளிகை பதவிக்காலத்தின் தொடக்கத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் ஒப்பந்தமாக, 300 ஒற்றை வழித்தட மற்றும் அகலமான விமானங்களை அது ஆர்டர் செய்தது.