• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

‘மீண்டும் நீட் தேர்வு எழுத தைரியம் இல்லை’: நாக்பூரில் மாணவி மரணம் – போலீஸ் கூறுவது என்ன?

Byadmin

Jun 6, 2026


நீட் தேர்வு, மாணவர்கள்
படக்குறிப்பு, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    • எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால் நீட் வினாத்தாள் கசிந்திருக்காது, என்னுடைய மகளும் உயிருடன் இருந்திருப்பார்,”

18 வயதான சினேகா சதுர்வேதியின் தந்தை கிருஷ்ணகுமார் சதுர்வேதி பிபிசி மராத்தியிடம் கூறிய வரிகள் இவை.

கடந்த மே 20-ஆம் தேதி நாக்பூரைச் சேர்ந்த சினேகா தனது வீட்டில் இருந்தபோது தற்கொலை மூலம் உயிரிழந்தார்.

மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை அவர் எழுதியிருந்தார். அதன் பின்னர் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த தேர்வு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இறப்பதற்கு முன்பாக தங்களுடைய மகள் குறிப்பு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றதாக ஸ்னேகாவின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதில் நீட் தேர்வு ரத்தானதால் ஏற்பட்ட அழுத்தம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

By admin