‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஹபீபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ், இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி வழங்கும் ‘ஹபீபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2024ம் ஆண்டு வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து ‘ஹபீபி’ படம் வருகிற 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக்கொண்டு ‘ஹபீபி’ எடுக்கப்பட்டுள்ளது.