விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிட வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் ஜோசப் விஜய்க்கும் எமது வாழ்த்துகள்!
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.