• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!

Byadmin

Sep 14, 2026


விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுப் பூஜிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதில், சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாகப் பேசுவது போன்ற பாணியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் சமயங்களில் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரம் செய்ததை நினைவூட்டும் வகையில் சைக்கிள் ஓட்டுவது போல் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் நடித்த ‘கில்லி’ படத்தின் பிரபல கபடி காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க சிலைகளைக் காண அப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். ‘விஜய் விநாயகர்’ என்று அழைக்கப்படும் இந்தச் சிலைகளுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா மற்றும் அரசியலின் தாக்கம் வழிபாட்டு முறைகளிலும் எதிரொலிப்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.

By admin