வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளிடம் நேற்று சனிக்கிழமை (12) கையளிக்கப்பட்டன.
துன்னாலை வடக்கு, பொலிகண்டி தெற்கு மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் திருலிங்கநாதன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




The post பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு! appeared first on Vanakkam London.