• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

மும்பை இந்தியன்ஸை மீண்டும் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ் – புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

Byadmin

May 3, 2026


தொடர்ந்து 2வது போட்டியாக அரைசதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தொடர்ந்து 2வது போட்டியாக அரைசதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட் (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 44வது போட்டியில் இன்று (மே 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த சூப்பர் கிங்ஸ், இன்னொரு முறை மும்பைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலிலும் ஆறாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நமன் திர் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் ஷர்மா ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தனர்.

By admin