• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

முரசு: வங்கக்கடலில் புதிய புயல் – எங்கே, எப்போது கரையைக் கடக்கும்? தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு என்ன?

Byadmin

Nov 2, 2026


வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

படக்குறிப்பு, இந்தப் புயலுக்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 11:30 மணி வாக்கில் முரசு புயலாக மாறியது என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

வங்கக் கடலில் உருவானது 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

படக்குறிப்பு, நவம்பர் 2-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் தீவிர சூறாவளி புயலாக மேலும் வலுவடையக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் தீவிர சூறாவளி புயலாக மேலும் வலுவடையக்கூடும்.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 2, 2026 அன்று நள்ளிரவு 11:30 மணி தொடங்கி நவம்பர் 3, 2026 அதிகாலை 4:00 மணி வரையிலான நேரத்தில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



By admin