தீவிரப் பங்களிப்பு:
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இந்த சாதனையை மாநிலத்தின் ஒரு ‘மைல்கல்’ என்று தெரிவித்தார். அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன், மக்களின் தீவிர பங்களிப்பும் இந்த சாதனையை அடைவதில் முக்கிய பங்கு வகித்தது என்று அவர் கூறினார்.
மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த தாமி, “இத்தகைய கூட்டு முயற்சிகள், 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ என்ற இலக்கை அடைய உதவும்.
மேலும், டிஜிட்டல் கல்வி, நிதி கல்வி, தொடர் கல்வி மற்றும் வாழ்க்கைத்திறன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிசெய்ய, அரசு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்படும்” என்று கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு, மாநில அமைச்சரவை ஜூன் 19 அன்று ஒப்புதல் அளித்திருந்தது.