• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

‘மூன்றே நிமிடங்களில் கவிழ்ந்துவிட்டது’ – வியட்நாம் படகு விபத்தில் தப்பிய பயணி கூறுவது என்ன?

Byadmin

Jul 12, 2026


விபத்து, வியட்நாம், பாதுகாப்புப் படையினர், வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்து, பிரதமர் மோதி, ஃபு குவோக் தீவு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகி இருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு கூறுகிறது.

அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு, ஜூலை 11 அன்று கவிழ்ந்தது.

‘துவோய் த்ரே’ நாளிதழின்படி, 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, ‘மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது.

விபத்து, வியட்நாம், பாதுகாப்புப் படையினர், வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்து, பிரதமர் மோதி, ஃபு குவோக் தீவு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அரசு ஊடக தகவல்களின்படி, வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவுக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது

விபத்து எப்படி நடந்தது?

ஹோன் மே ரூட் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரம் சென்ற பிறகு, அதிவேகப் படகில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அது கவிழ்ந்தது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

By admin