• Thu. Sep 10th, 2026

24×7 Live News

Apdin News

‘மெக்கா ஒப்பந்தத்தில்’ இரான் இணைய வேண்டும் என ரஷ்யா விரும்புவது ஏன்?

Byadmin

Sep 10, 2026


மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சௌதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சௌதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹானை சந்தித்தார்.

    • எழுதியவர், ஓமர் மஹ்மூத்
    • பதவி, பிபிசி நியூஸ் உருது
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எதிர்காலத்தில் இரானும் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இணையக்கூடும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருப்பது, இந்தப் புதிய பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் வரம்பு மற்றும் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி திங்கள்கிழமை மாஸ்கோ அரசு சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், “சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தானின் உதவியுடன் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்பாடு செய்வதற்கான நேரம் இது” என்று தெரிவித்தார்.

மெக்கா ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகளும் “கூட்டு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கூட்டணிக்கான ஒரு கருத்தைக் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கு “மெக்கா பாதுகாப்புக் கூட்டணி” என்று பெயரிடப்பட்டது.

“மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin