• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

மெஸ்ஸி பீலே, மாரடோனாவை முந்திவிட்டாரா? மிகச் சிறந்த கால்பந்து வீரர் யார்?

Byadmin

Jul 18, 2026


அர்ஜென்டினாவின் அடையாளமான நீலம் மற்றும் வெள்ளை நிற சட்டையில் லியோனல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 39 வயதிலும், மெஸ்ஸி 2026 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் மைய நபராகத் திகழ்கிறார்

லியோனல் மெஸ்ஸி தனது தொழில் வாழ்க்கையின் மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளையில், ஒரு பரிச்சயமான கேள்வி மீண்டும் எழுகிறது. இந்த அர்ஜென்டினா நட்சத்திரம் வரலாற்றிலேயே மிகச்சிறந்த கால்பந்து வீரரா? அவர் தனது நாட்டுக்காரரான டியாகோ மாரடோனா, பிரேசிலின் பீலே ஆகியோரை முந்திவிட்டாரா?

39 வயதிலும், மெஸ்ஸி 2026 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரராக நீடிக்கிறார்.

இளம் வயதில் இருந்தது போன்ற அதிரடியான ஆட்டக்காரராக அவர் இப்போது இல்லை என்றாலும், மெஸ்ஸி தனது ஆட்டக் களம் குறித்த பார்வை, நிலைநிறுத்தம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து போட்டிகளின் போக்கை மாற்றுகிறார் என்றும், பல நேரங்களில் களத்திலேயே ஒரு பயிற்சியாளராகச் செயல்படுகிறார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவர் தனது போட்டியாளர்களை முந்திவிட்டாரா?

மெஸ்ஸிக்கு ஆதரவான வாதம்

கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் மெஸ்ஸியை முதலிடத்தில் வைப்பவர்கள், பொதுவாக இரண்டு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றனர்- நீண்ட காலம் நீடித்தது மற்றும் சீரான ஆட்டத்திறன்.

By admin