• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

மேகமலை வெளியேற்ற உத்தரவில் திருப்பம்: 8,000 குடும்பங்களுக்கு நம்பிக்கை தந்த உச்ச நீதிமன்றத்தின் புதிய முடிவு

Byadmin

Nov 8, 2026


மேகமலை வனப்பகுதி, மக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேனி
படக்குறிப்பு, மேகமலை மக்கள்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மேகமலை வனப்பகுதியில் வன உரிமைச் சட்டத்தின்கீழ் அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் குழு ஒன்றை வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

வன உரிமைச் சட்டத்தின்படி பழங்குடிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக இந்தக் குழு ஆராய உள்ளது. 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

‘இந்தத் தீர்ப்பு சுமார் எட்டாயிரம் குடும்பங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது’ என கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராம மக்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர்கள் கூறுவது என்ன?

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ள இந்த ஒன்றியத்தில் இலவம் பஞ்சு, முந்திரி, நவதானியங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடுவது முக்கியத் தொழிலாக உள்ளது.

‘ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படை’

இந்த நிலையில், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, கண்டமனூர், சின்னமனூர் ஆகிய வனச்சரகங்களில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.



By admin