• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

Byadmin

Nov 8, 2026


தனுசு

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வேலை யாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். கடனுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலை மாறும். கடன் தர நிதி நிறுவனங்கள் வங்கிகள் தேடி வரும் காலம். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். திருமணமா கதவர்களுக்கு திருமணம் கூடி வரும். புத்திர பிராப்தம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். சஷ்டி விரதம் இருந்து விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

மகரம்

பொருளாதார மேன்மை கூடும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் குரு கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார மேன்மையையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். சிந்தனை செயல் திறன் அதிகரிக்கும். தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். திருமணக் கனவு நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். கந்த சஷ்டி காலங்களில் குங்கும அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

கும்பம்

மனபயம் அகலும் வாரம். வெகு விரைவில் ராசியை விட்டு ராகு பகவான் வெளியேறப் போகிறார். கற்பனைக் கவலைகள் மன சஞ்சலங்கள் அகலும்.மனக்குழப்பம் விலகும். பொறுமை, நிதானம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருக்கும் சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் பிறக்கும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். சிலர் வீட்டை புதுப்பிக்கலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். பழைய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை சாதகமாகும். வேற்று மொழி நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளியூர் வெளிநாடு செல்லலாம். இளநீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

மீனம்

பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை உள்ளது. இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். 10.11.2026 அன்று அதிகாலை 2.48 வரை சந்திராஷ்டமம் உள்ளது. பெண்களால் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். அலைச்சல் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நினைப்பதும், நடப்பதும் முரண்பாடாக இருக்கும். சக்தி விரதம் இருந்து கரும்புச்சாறு அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

By admin