மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.24 வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை மறுநாள் (ஏப்.29) நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 93.19 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்த்து மேற்கு வங்கத்திலும் மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜகவிற்கு இடையே போட்டி நிலவுகிறது.