• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

ஒருவனுக்கு ஒருத்தி என்பது எவ்வளவு தூரம் உண்மை? அறிவியல் கூறுவது என்ன?

Byadmin

Apr 27, 2026


ஒருவனுக்கு ஒருத்தி என்பது எவ்வளவு தூரம் உண்மை? அறிவியல் கூறுவது என்ன?

காதல் ஒன்றும் சீரற்றது இல்லை என்ற கருத்து வரலாறு நெடுக மக்களை எப்போதுமே ஈர்த்துள்ளது. பண்டைய கிரேக்கத்தில், மனிதர்கள் ஒரு காலத்தில் நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் இரண்டு முகங்களைக் கொண்ட உயிரினமாக இருந்ததாகவும், ஸ்யூஸ் நம்மை இரண்டாகப் பிரித்து, ஒரு பாதி மற்றொரு பாதியைத் தேடுவதற்கு விட்டுவிட்டார் எனவும் பிளாட்டோ கற்பனை செய்தார்.

அப்போதிருந்து, ஒரு பாதியான நாம் பூமியில் சுற்றித் திரிந்து, காணாமல் போன மற்றொரு பாதியைத் தேடி வருவதாகவும் கூறினார். இது நவீனகால ஆத்ம துணை கருத்தாக்கத்திற்கான கவித்துவத்தையும், எங்கோ யாரோ ஒருவர் நமக்கு முழுமையடைந்து விட்டதைப் போன்று உணர்வைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும் ஒரு புராணக் கதை.

இடைக்காலத்தில், ஆர்தர் மன்னரைப் பற்றிய கவிதைகளும் கதைகளும் இதேபோன்ற உணர்வை “அரச காதல்” என்று விவரித்தன. இது லான்ஸ்லாட்டின் கினிவேர் மீதான காதல் போன்ற ஒரு வலுவான, பெரும்பாலும் ரகசியமான காதலை குறிக்கிறது. இந்தக் கதைகளில், தன்னால் அவளை நேசிப்பதாக ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, ஒரு மாவீரர் தான் நேசித்த பெண்ணுக்காக தியாகங்களைச் செய்வதன் மூலம் தனது விசுவாசத்தையும் மதிப்பையும் வெளிப்படுத்துவார்.

மறுமலர்ச்சியின்போது, ஷேக்ஸ்பியர் போன்ற எழுத்தாளர்கள் “நட்சத்திர காதலர்கள்” என்று விவரித்தனர். இவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த தம்பதிகள், ஆனால் குடும்பப் பிரச்னைகள், துரதிர்ஷ்டம் அல்லது விதியால் பிரிந்தனர். பிரபஞ்சம் அவர்களை ஒன்றிணைத்தது போலவும், ஆனால் மகிழ்ச்சியான முடிவு அவர்களுக்குக் கிடைப்பதைத் தடுத்தது போலவும் இருந்தன.

சமீப காலங்களில், ஹாலிவுட் மற்றும் காதல் புதினங்கள் நமக்கு தேவதைத் தனமான காதல் கதைகளைக் காட்டுகின்றன.

By admin