• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

வாஷிங்டன் ஹோட்டல் துப்பாக்கிச் சூடு: டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

Byadmin

Apr 27, 2026


பாதுகாப்பு அதிகாரி ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவத்தின் மையப்புள்ளியாக தான் இருந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, “இதைவிட ஆபத்தான தொழில் வேறு எதுவும் இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை,” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரகசிய சேவை பாதுகாவலர்களின் ஒரு சிறிய படையே அதிபரை உலகின் மிக பாதுகாப்பான மனிதராக மாற்றியிருந்தாலும், அவரைப் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது நிரூபணமாகி வருகிறது.

முதலில் 2024 கோடையில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கொலை முயற்சியில் ஒரு தோட்டா அவரது காதைத் உரசிச் சென்றது. சரியாக 64 நாட்களுக்குப் பிறகு, புளோரிடா கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு கொலை முயற்சியின் இலக்கானார் டொனால்ட் டிரம்ப்.

இப்போது, நாட்டின் தலைநகரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் விருந்து நிகழ்ச்சியின் கொண்டாட்டங்களை துப்பாக்கிச் சூடு சத்தம் சிதறடித்த சில மணிநேரங்களில், டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு மீண்டும் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் சந்தேக நபரின் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்

பட மூலாதாரம், Truth Social/@realDonaldTrump

படக்குறிப்பு, துப்பாக்கி சூடு சம்பவத்தின் சந்தேக நபரின் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்

சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயதான கோல் டோமஸ் ஆலனின் நோக்கம் மற்றும் சரியான இலக்கு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் அதிபருக்கு இவ்வளவு நெருக்கமாக எப்படி வர முடிந்தது என்பது குறித்து கேள்விகள் குவிந்து வருகின்றன.

By admin