9
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் முழுவதும் தற்போதைய சில்லறை விற்பனை விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும். உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் காரணமாக நிறுவனம் தொடர்ந்து அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும், வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூ. 4,765.00
5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூ. 1,910.00
2.3 கிலோ கிராம் சிலிண்டர்: ரூ. 890.00
பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வாழ்க்கைச் செலவினங்களால் வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுக்கு, லிட்ரோ நிறுவனத்தின் இந்த விலை ஸ்திரத்தன்மை அறிவிப்பு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.