• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

மொரிஷியஸை 3 – 2 என வீழ்த்தி கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது இலங்கை

Byadmin

Oct 7, 2026


மொரிஷியஸ் தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (5) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த மொரிஷியஸ் அணிக்கு எதிரான சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த வெற்றியானது மிகப் பெரிய வெற்றியாக பதிவானது.

மொரிஷியஸுக்கு எதிராக விளையாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே இலங்கை வெற்றியீட்டியது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

‘இது ஒரு மைல் கல் வெற்றி. இதற்காகத்தான் கடந்த இரண்டு வருடங்களாக அணியைக் கட்டி எழுப்பினோம். அடுத்தது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்’ என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் பேருவகையுடன் தெரிவித்தார்.

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் தன்னைவிட 8 இடங்கள் முன்னிலையில் உள்ள மொரிஷியஸுக்கு ஈடுகொடுத்து விளையாடிய இலங்கை ஆரம்பம் முதல் கடைசிவரை விடாமுயற்சியுடன் விளையாடி மகத்தான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் தரவரிசையில் இலங்கை மேலும் ஒரு இடம் மன்னேறி185ஆவது இடத்துதை அடை;நதுள்ளது.

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் ஸ்டீவன் டி ரொபிலார்ட் மூலம் மொரிஷியஸ் முதலாவது கோலை போட்டு இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், 14 நிமிடங்கள் கழித்து இலங்கை அணித் தலைவர் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தனது எல்லையில் இருந்து உதைத்த ப்றீ கிக் பந்தை நோக்கி வேகமாக ஓடிய ராகுல் சுரேஷ்  சற்று கடினமான கோணத்திலிருந்து அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

தொடர்ந்து 40ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த கோணர் கிக் பந்தை நிலோஷன் செந்தூர்வாசன் தனது தலையினால் முட்டி அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு இலங்கையை 2 – 1 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடியதால் அடிக்கடி மத்தியஸ்தர் விசிலை ஊதி இரண்டு அணியனருக்கும் மாறிமாறி ப்றீ கிக் கொடுத்தார்.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் மொரிஷியஸ் பின்கள வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து இலங்கை வீரர் ஒருவரை விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் இலங்கைக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை 70ஆவது நிமிடத்தில் சாம் டுரன்ட் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தி இலங்கையை 3 – 2 என முன்னிலையில் இட்டார்.

எனினும் 82ஆவது நிமிடத்தில் கோர்ணர் கிக் ஷோர்ட் பாஸைப் பயன்படுத்தி மொரிஷியஸ் வீரர் ஒருவர் கோலை நோக்கி பரிமாறிய பந்தை ப்ரன்கொய்ஸ் ஒரேலியன் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

இதனைத் தொடர்ந்து மூன்று தடவைகள் கோல் நிலையை சமப்படுத்த மொரிஷியஸுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், இலங்கை கோல்காப்பாளர் சுஜான் பெரேராவும் பின்கள மற்றும் மத்திய கள வீரர்களும் அவற்றை முறியடித்து இலங்கையின் மகத்தான வெற்றியை உறுதி செய்தனர்.

By admin