• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

மோதி வேண்டுகோளால் இந்தியர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்களா? தங்க விற்பனை சரிவு பற்றி நிபுணர்கள் விளக்கம்

Byadmin

Nov 22, 2026


இந்தியாவில் பண்டிகைகளும் திருமணங்களும் நகைகள் வாங்குவதற்கான முக்கிய நிகழ்வுகளாகவும் அமைகின்றன

படக்குறிப்பு, இந்தியாவில் பண்டிகைகளும் திருமணங்களும் நகைகள் வாங்குவதற்கான முக்கிய நிகழ்வுகளாகவும் அமைகின்றன (சித்தரிப்புப்படம்)

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி, சனிக்கிழமை (நவம்பர் 21) லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் தங்களுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து பிரதமர் மோதி கூறுகையில், “ஓராண்டுக்கு முன்பு நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஓராண்டுக்கு, அவசியம் இல்லையென்றால் தயவுசெய்து தங்கம் வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “லால் பகதூர் சாஸ்திரி ஒருமுறை நாட்டு மக்களிடம் சிறிது காலத்துக்கு உணவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டபோது, மக்கள் அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தனர். அதேபோல், நாட்டு மக்களும் எனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தனர். தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று நாட்டின் மக்கள், ‘மோதி ஜி, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்களுடைய பணம் மிச்சமானது’ என்று கூறுகின்றனர்” என்றார்.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1.8 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1.25 லட்சமாகக் குறைந்துள்ளது.

இந்த வகையில் பார்க்கும்போது, தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்குப் பிறகு இந்திய மக்கள் உண்மையிலேயே தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்களா? தங்கம் வாங்குவது குறைந்ததும் அதன் விலை சரிவதற்கு ஒரு காரணமா?

By admin