• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

பரந்தூர் விமான நிலைய திட்டம்: விஜய் அறிவித்து 80 நாள் கடந்தும் அரசாணை இல்லாததால் ஏகனாபுரம் மக்கள் கவலை

Byadmin

Nov 22, 2026


பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து பற்றி நீதிமன்றம் கேள்வி: விஜய் அறிவித்து 80 நாள் கடந்தும் அரசாணை இல்லாததால் மக்கள் கவலை

‘அரசுக்குத் தோன்றும் விருப்பங்களின் அடிப்படையில் ஒரு விமான நிலையத்தைக் கட்டமைக்க முடியாது. நிலம் கையகப்படுத்தி பொதுமக்களின் பணத்தைச் செலவிட்ட பிறகு திட்டத்தை எப்படிப் பாதியிலேயே கைவிட முடியும்?’

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பிய இந்தக் கேள்வி, பரந்தூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டாலும் பத்திரப்பதிவுக்கான தடை விலக்கப்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக, பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.

“110 விதியின்கீழ் முதலமைச்சர் திட்டத்தை ரத்து செய்தும் அரசாணை வெளியிடப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” என்கிறார், தி.மு.க எம்.பி வில்சன். ஆனால், விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த தி.மு.க அரசு தீவிரம் காட்டியது. அங்குள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.

By admin