• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

தேங்காய் எண்ணெய் – கடலை எண்ணெய் இரண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் எதில் அதிகம்? புதிய ஆய்வு முடிவு

Byadmin

Nov 22, 2026


தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சமீப காலமாக தேங்காய் எண்ணெய்க்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. சமையலுக்கு ‘தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது ஆரோக்கியமானது’ போன்ற கருத்துகளை கேட்க முடிகிறது.

‘கீட்டோ, பேலியோ’ போன்ற உணவுமுறைகளில் தேங்காய் எண்ணெய்க்கு பிரத்யேக இடம் உள்ளது.

இந்நிலையில் தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) ஆய்வு ஒன்று தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் பயன்பாடு தொடர்பான விவாதங்களை எழுப்பியது.

கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்துபவர்களிடம் அதிக எல்.டி.எல் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

எல்.டி.எல் (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்) கொலஸ்ட்ரால் என்பது ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ என்றும் அழைக்கப்படுகிறது.

By admin