• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

இரு அறிமுகமில்லா குடும்பங்கள் இணைந்து ஒரே வீட்டை வாங்கி ஒன்றாக வசிப்பது ஏன்?

Byadmin

Nov 22, 2026


இடதுபுறம் புல்மேன் குடும்பத்தினரும், வலதுபுறம் வில்காக்ஸ் குடும்பத்தினரும் ஒரே சோஃபாவில் அமர்ந்துள்ளனர்.

படக்குறிப்பு, இடதுபுறம் புல்மேன் குடும்பத்தினரும், வலதுபுறம் வில்காக்ஸ் குடும்பத்தினரும் அமர்ந்துள்ளனர். சந்தித்த சிறிது காலத்திலேயே இரு குடும்பத்தினரும் இணைந்து ஒரு வீட்டை வாங்கினர்

    • எழுதியவர், டேவிட் சில்வர்பெர்க்
    • பதவி, டொராண்டோ வணிகச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எலிசபெத்தும், டாம் வில்காக்ஸும், தங்களுக்கும் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விருப்பமான வீட்டை வாங்குவதற்குத் தங்களிடம் ஒருபோதும் போதிய பணம் இருக்காது என்பதை உணர்ந்தபோது, ஒரு துணிச்சலான முடிவை எடுக்கத் தீர்மானித்தனர்.

இளம் குழந்தைகளைக் கொண்ட மற்றொரு தம்பதியைக் கண்டுபிடித்து, தங்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், ஒரு வீட்டை வாங்குவதற்கான செலவைச் சரிசமமாகப் பகிர்ந்துகொண்டு அனைவரும் ஒன்றாகக் குடியேறலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

கனடாவில் வீட்டு விலைகள் நீண்டகாலமாக மிக அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்றான வான்கூவரில் வசிக்கும் வில்காக்ஸ் குடும்பத்தினர், தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்குப் பின்புறம் தோட்டம் கொண்ட ஒரு வீட்டை வாங்க மிகவும் விரும்பினர்.

“நடந்து செல்ல வசதியான ஒரு பகுதியில், டிராம்போலின் வைக்கக்கூடிய அளவுக்குப் பெரிய முற்றத்துடன் கூடிய வீட்டை நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களால் அதை வாங்க முடியவில்லை,” என்று சுகாதாரத் துறையில் திட்ட மேலாளராகப் பணிபுரியும் எலிசபெத் கூறுகிறார்.

பத்து லட்சம் கனடிய டாலர் (சுமார் 6.46 கோடி ரூபாய்) மட்டுமே அவர்களது பட்ஜெட்டாக இருந்தது. அந்தத் தொகைக்கு பால்கனியுடன் கூடிய சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

By admin