• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

Byadmin

Nov 22, 2026


சிம்மம்

உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். ராசியில் குரு, செவ்வாய், கேது சேர்க்கை உள்ளது. எடுக்கும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேன்டும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். உங்களின் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவீர்கள்.கேளிக்கையான உல்லாச பயணங்கள் நடைபெறும். விவாகரத்து வழக்குகளை ஒத்திப் போடவும். அஷ்டமச் சனியின் பாதிப்பு குறையும்.கணவரின் அன்பளிப்பான அசையாச் சொத்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம் என்பதால் குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசக் கூடாது. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். பௌர்ணமி அன்று புனித நீரால் சிவனுக்கு அபிசேகம் செய்யவும்.

கன்னி

தனவரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் தன ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் இணைவதால் தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. சொத்துச் சேர்க்கை, சொத்துக்களால் வருமானம் உண்டாகும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். மறு திருமண முயற்சி கைகூடும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். குடும்பத்திற்குத் தேவையான உயர்ரக பொருட்களை வாங்குவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். 22.11.2026 அன்று காலை 5.55 முதல் 24.11.2026 அன்று காலை 7.24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைப்பதற்கு மாறான பலன்கள் நடக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பௌர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

துலாம்

நினைப்பது நடக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரனுடன் புதன் இணைந்துள்ளார். பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும். தன வரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுபமங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். 24.11.2026 அன்று காலை 7.24 முதல் 26.11.2026 காலை 7.11 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். பௌர்ணமி அன்று பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

விருச்சிகம்

புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பத்தாம் அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். புதிய தொழில் யுக்திகள், முயற்சிகள் மிகுந்த லாபம் பெற்றுத் தரும். தொழில் போட்டிகள் குறையும். உத்தியோக அனுகூலம் உண்டு. புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். ராஜ யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். வார இறுதியில் பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் விவகாரத்தில் முடியும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும். உயில் எழுதுவதற்கு உகந்த காலம். இதுவரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும். திருமண முயற்சி சாதகமாகும். 26.11.2026 காலை 7.11 முதல் 28.11.2026 அன்று காலை 7.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் கூடும். பௌர்ணமி அன்று மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

By admin