• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்த இலங்கையுடன் இணையும் அமெரிக்கா!

Byadmin

Nov 22, 2026


அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ,

இணையவழி மோசடிகள் சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினிக்குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்ற விசாரணைப் பிரிவு பணியகத்தின் பிரதிநிதிகளையும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

சர்வதேச மோசடி வலையமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உள்ளுர் விசாரணையாளர்களுடன் இணைந்து செயற்படும் நோக்கில் மத்திய புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கடந்த நவம்பர் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நேற்று வரையில் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் , இணையவழி மோசடிகள் மற்றும் நாடுகடந்த குற்றவியல் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

புலனாய்வு உத்திகளை மீளாய்வு செய்தல், இலக்கமுறைச் ஆதாரங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் இலங்கைக் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களைப் பிரித்தெடுத்தல் ஆகியவையும் இந்த ஒத்துழைப்பில் உள்ளடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin