• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

Byadmin

May 12, 2026


முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு , பொது சுடர் ஏற்றபட்டது. தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

அதன் போது, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் , வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

The post யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் appeared first on Vanakkam London.

By admin