• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

யாழ்., இந்துக் கல்லூரியின் ஒழுங்கமைப்பில் கிளிநொச்சி மாணவர்களுக்கு பயனுள்ள விஞ்ஞான கண்காட்சி

Byadmin

Jul 26, 2026


யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள SciVerse – 2026 பரிசோதனைக் கண்காட்சி, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நாளையும் (27) நாளை மறுதினமும் (28) காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில், தரம் 10 மற்றும் 11 விஞ்ஞானப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் அனைத்துச் செய்முறைப் பரிசோதனைகளும் நேரடியாக காட்சிப்படுத்தப்படுவதுடன், அவை தொடர்பான அறிவியல் விளக்கங்களை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் வழங்கவுள்ளனர்.

விஞ்ஞானப் பாடத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு, யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

By admin