• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

கோவை: அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு கட்டப்பை கொண்டுவர தடை ஏன்?

Byadmin

Jul 26, 2026


குழந்தை கடத்தல், அரசு மருத்துவமனை, கோவை, கட்டைப்பை
படக்குறிப்பு, (கோப்புப் படம்)

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் கட்டப்பைகள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தலைத் தடுப்பதற்காக மட்டுமின்றி, பிரசவ வார்டில் தேவையற்ற அளவுக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் கட்டப்பைகளை அனுமதிப்பதில்லை என்று மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதா கூறினார்.

அதர்வா – நிமிஷா விஜயன் நடித்த ‘டிஎன்ஏ’ என்ற திரைப்படத்திலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை பெண் ஒருவர் கட்டப்பையில் வைத்து கடத்துவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை எடுத்ததாக படத்தின் இயக்குநர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்படி கட்டப்பையில் பச்சிளங்குழந்தையைக் கடத்த முயற்சிக்கும் போது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து அதிகமுள்ளதாக பிபிசியிடம் கூறினார் பச்சிளங்குழந்தைகள் மருந்துவர் சித்தார்த்.

வெவ்வேறு ஊர்களில் குழந்தை கடத்தல் நிகழ்வுகள்

குழந்தை கடத்தல், அரசு மருத்துவமனை, கோவை, கட்டைப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

By admin